இடுகைகள்

காதல் ஆலமரமாய்

 ஆயிரம் காதல்..... கவிதைகளை ..... எழுதிவிட்டேன்..... எனக்குள் காதல் ஆலமரமாய்..... விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது.....! என் மூச்சு காற்று நிற்பதற்குள்...... என் காதலியை கண்டுவிடவேண்டும்..... அவள் விரும்பும் காதல்...... கவிதையொன்றை....... அவளுக்காக எழுத வேண்டும்.....! & கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

பல்சுவைக்கவிதைகள் 1000 கஸல்

இனியவன் கஸல் கவிதைகள் --------------------------------------------- பல்சுவைக்கவிதைகள் --------------------------------------------- நீ சொன்ன ஒரு வார்த்தை.... ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ கவிப்புயல் இனியவன் இது எனது 1000 கஸல் 

பல்சுவைக்கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை --------------------------------------------- பல்சுவைக்கவிதைகள் --------------------------------------------- என் ........ காதலின் வலிமை ...... உனக்கு புரியவில்லை ..... என்றோ என் காதலை ..... நினைத்து பார்ப்பாய் ...... அப்போது புரியும் என்னை ..... இழந்ததால் வலி ...........!!! உன்னை காணும் .... போது வேண்டுமென்றே..... இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் ..... உள்ளே இதயம் நொறுங்கும் .... சத்தம் யாருக்கு புரியும் .....? ^^^^^ கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை பல்சுவைக்கவிதைகள் ^^^^^ 200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில் கவிதை உள்ளது

ஒரு காதல் ஒரு ஓசை........!

ஒரு காதல் ஒரு ஓசை........! --------------------------- இதயத்தில் இதமாய் வந்- தாய் காதலை சுகமாய் தந்- தாய் நினைவில் இன்பமாய் இருந்- தாய் சொல்லடி என்ன செய்- தாய்............? உன்னில் என்னை மறந் -தேன் உயிராய் உன்னை நினைத் -தேன் உறவுகளோடு உன்னிடம் வந் -தேன் உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன் ^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் -வட இலங்கை பல்சுவைக்கவிதைகள் ^^^^^^^^^^^^^^^^^^

கவிப்புயல் இனியவன் பல்சுவைக்கவிதைகள்

---------------------------------- திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் ---------------------------------- சின்ன சண்டையிட்டு ..... சின்ன கோபத்துடன் .... சின்னனாய் விலகியிருப்பது ... ஊடல் எனப்படும் ....!!! ஊடலின் அதிக இன்னமே .... கூடலின் அதிக இன்பமாகும் .... கூடலின் ஒரு செயலே .... ஊடல் ஆகும் ......!!! + குறள் 1330 + ஊடலுவகை + ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் + திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் + கவிதை எண் - 250 ^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் -வட இலங்கை பல்சுவைக்கவிதைகள் ^^^^^^^^^^^^^^^^^^ திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- தகவளுடன் காதல்கவிதை --------------- கண்ணே ... ஜேர்மனியின் பெர்லின் சுவர் ... இடிக்கப்படு பலவருடமாகிறது ... இரு வேறுபட்ட பொருளாதார ... முறைமைகள் கூட ஒன்றாயின ...! கண்ணே நீ ... எனக்கு விதிக்கும் காதல் .. சுவர் ஏனடி நீண்டுகொண்டே ... செல்லுகிறது .... காதலுக்கு கண்டிப்பு தேவை.... துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...! ^^^ கவிப்புயல் இனியவன் தகவளுடன் காதல்கவிதை 

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 04

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- ஒருதலைக்காதல் கவிதை --------------- உன்னை நினைத்துக் கொண்டிருக்க ....... இனிப்பாய் இருக்கிறது...... நீயும் என்னை........... நினைத்துக்கொண்டிருப்பாய் என நினைத்துக்கொள்வது..... ஒருதலைக்காதல் .......! கோலங்களை...... மனசுக்குள் போடுகிறேன்...... பூவை தலையில் சூட ... ஏங்கிக்கொண்டு .... இருக்கிறேன் .......... காதலிலே கொடூரமானது ... ஒருதலை காதல் தான் ...! ^^^ கவிப்புயல் இனியவன் ஒருதலைக்காதல் கவிதை 

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 03

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- தன்னம்பிக்கை கவிதை --------------- தனக்கிருக்கும்..... உறுதியான சக்தி ...... தன்னம்பிக்கை..............! தன்மானம் காத்திட ..... தலைசாயாத சக்தி .... தன்னம்பிக்கை.............! எல்லாமே இழந்தாலும் .... எஞ்சியிருக்கும் சக்தி .... தன்னம்பிக்கை...............! உயிரே போனாலும் ............. உயிர்த்தெழும் சக்தி ........... தன்னம்பிக்கை...........! இரக்க பார்வையை ...... இல்லாதொழிக்கும் சக்தி ..... தன்னம்பிக்கை............! எல்லாம் சாத்தியமே என்று ...... அறிவை நம்பும் சக்தி ........ தன்னம்பிக்கை.............! ^^^ கவிப்புயல் இனியவன் தன்னம்பிக்கை கவிதை 

பொருளாதாரக்கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- பொருளாதாரக்கவிதை --------------- ஏழையின் வீட்டில் ... பசி வயிற்றில் பிறக்கிறது ... செல்வந்தன் வீட்டில் ... பசி கண்ணில் பிறக்கிறது ...! ஏழையின் வீட்டில் ... வயிறு அடுப்பாக எரியும் ... செல்வந்தன் வீட்டில் ... அலங்காரமாய் அடுப்பு எரியும்....! ஏழையின் வீட்டில் ... பசி நோய்க்கு காரணி .. செல்வந்தன் வீட்டில் ... நோய்நீக்கும் காரணி பசி ...! ^^^ கவிப்புயல் இனியவன் வறுமையின் கொடுமை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 01

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை 

நான்குவரி கவிதை

தலைப்பு "அல்லியின் காதல் " --------------------------------- நான்குவரி கவிதை --------------------------------- நிலவொளியால் பருவமடையவைத்தவனே..... காதல் தடாகத்தில் காத்திருக்கவைத்தவனே.... மழைத்துளியாய் என்மேனியை வருடுகிறவனே அல்லி நான் உன்னை அள்ளத்துடிக்கிறேன்........ ^^^ கவிப்புயல் இனியவன்

வறண்டிருக்கும் மண்ணுக்கும்

தலைப்பு "மழைத்துளி " --------------------------------- தள்ளுவண்டிக்காருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு மழைத்துளி  ஒரு விஷத்துளி...! வறண்டிருக்கும் மண்ணுக்கும் குடத்தோடு நிற்கும் பெண்ணுக்கும் மழைத்துளி ஒரு அமிர்ததுளி....! கைகோர்த்து செல்லும் காதலருக்கும் பள்ளிவிட்டுவரும் பிள்ளைகளுக்கும் மழைத்துளி ஒரு இன்பத்துளி.....! ^^^ கவிப்புயல் இனியவன் 22.04.2017 அன்புடன் நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் நிலாமுற்றம் குழுமம்

விருந்து

விருந்து நான்கு வரிகவிதை ----------------- விருந்து உறவுகலுக்கு கொண்டாட்டம் வீட்டிலுள்ள சேவலுக்கு திண்டாட்டம் உள்ளவனுக்கு செய்தால்  நஞ்சு இல்லாதவனுக்கு செய்தால் தொண்டு ^^^ கவிப்புயல் இனியவன் 21.04.2017 to 22.04.2017

சாதனையா ?

ஊ ..ல ..ழ ..ள .. நட்சத்திரக் கவிதைகள் இரவுக் கவிதைப் போட்டி 21-04௨017 ******************************************** சோதனையா ? சாதனையா ? ******************************************** முயற்சியின்பாதைகள் சோதனை.... சோதனையின்முடிவுகள் சாதனை... சோதனையை தலைக்கெடுக்காதே...... சாதனையை தலைக்கனமாக்காதே......! புரிதலில்லையேல் சோதனை...... புரிதலிருந்தால் சாதனை......... சோதனைகளும் நிலைப்பதில்லை...... சாதனைகளும் நிலைப்பதில்லை......! ^^^ கவிப்புயல் இனியவன் யாழ்ப்பணம்

கேள்விக்குறியில்லாத

கேள்விக்குறியில்லாத வினாத்தாள் ---------------------------------------- புதுக்கவிதைப் போட்டி 21.04.2017 - 22.04.2017 ------------------------------- பிறப்பிலிருந்து இறப்புவரை..... வாழ்க்கையொரு ............................. கேள்விக்குறியில்லாத வினாத்தாள் இங்கே கேள்விகள்..... ஆயிரமாயிரம் .......... கேள்விக்குறியில்லாததால்........ விடைகள் சந்தேகமாகிறது......! பள்ளிப்பருவத்தில் ஏன் படிக்கின்றாயென்று கேட்டார் தாத்தா....... சந்தோசமாய் வாழ்வதற்கென்றேன்....... படிக்காதவர்கள்  சந்தோசமாய்..... வாழ்வில்லையா....... ஆலயத்துக்கு ஏன் போகிறாய்...... என்று கேட்டார் தாத்தா........ இறைவனிடம் கல்வியை கேட்கப்போகிறேன் அப்போ பாடசாலை  கல்வியைத்.... தரவில்லையா ............... துன்பத்தால் துவண்டு விழுந்தேன்..... இன்பத்துக்காய் இறைவனை....... மன்றாடினேன்......... தோளில் தாட்டிக்கேட்டார் தாத்தா... துன்பத்தை இறைவன் தருவதில்லையா.... கேள்விக்குறியில்லாத வினாத்தாள் ...... முற்றுப்புள்ளியில்லாத விடைகள்...........! ^^^ கவிப்புயல் இனியவன் இலங்கை -யாழ்ப்பாணம் கவி அகரம்இலக்கியவட்டம்