இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக அவல சென்ரியூ கள்

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை

தமிழ் இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. சமூகப் பொருளாதார அரசியல் சூழல்களே இம்மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் எனலாம். அறிவியலின் நவீன வளர்ச்சி உலகின் பரப்பை சுருக்கிவிட்டது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மொழிபெயர்புக் கலையின் வளர்ச்சியினாலும் பிற நாட்டு இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், வடிவங்கள் போல் வன தமிழில் தலை எடுக்கத் தொடங்கின. இவ்வகையில் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவம் தான் "சென்ரியூ" கவிதை வடிவம். "சென்ரியூ" - தோற்றம் சென்ரியூ கவிதைகளின் தோற்றம் குறித்துப் பொதுவாகச் சொல்வதெனில் இஃது ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியது என்று கூறிவிடலாம் என்றாலும் ஹைகூவிலிருந்து சென்ரியு தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டதற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. 1980 ஆம் ஆண்டு "அன்றாடமை" என்னும் தலைப்பில் சென்ரியூ அங்கதக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. இதன் தொகுப்பாசிரியர் மேரி கேசல் என்பவர் இந்நூலின் முன்னுரையில் "ஹைகூவின் அங்கத வடிவம் சென்ரியூ. ஹைகூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில்,

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ , சென்ரியு ,  லிமரைக்கூ வடிவம் ஹைக்கூ ‘ஹை’  என்பதற்கு  ஜப்பானிய  அடிச்  சொல்லுக்கு  அணுத்தூசி,  கரு,  முழுமையான  கரு  என்ற  பொருள்  உண்டு.  ‘கூ’  என்பது  சொற்றொடர்,  வெளிப்பாடு,  வாக்கியம்,  பகுதி,  ஒரு  வரி,  ஓர்  அடி,  ஒரு  செய்யுள்,  ஒரு  கவிதை  என்றும்  பொருள்  தருகிறது.  இவற்றை  இணைத்துப்  பார்க்கையில்  ஹைக்கூ  என்பது  கரு  போன்றும்,  உயிரணு  போன்றும்  உருவானதொரு  கவிதை  என்னும்  முழுப்பொருளைத்  தரும்.  மேலும்  வளர்ச்சிக்கும்  விரிவுக்கும்,  ஒரு  கருவுக்கு  உள்ளிருக்கும்  இன்னொரு  கவிதைக்  கருவைக்  காண்பதற்கும்  ஹைக்கூ  என்ற  சொல்  சிறப்பாக  அமைந்திருப்பதைக்  காணலாம்.  ‘ஹைக்கூ’  ஜப்பானிய  மொழிக் கவிதை.  3  அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள்  கொண்ட  ஜப்பானிய  ஹைக்கூ  ஐந்து,  ஏழு,  ஐந்து  சீர்களைக்  கொண்டு  17  சீர்களில்  ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு  இந்த  சீர்  எண்ணிக்கை  தேவையில்லை). ஜென்  தத்துவத்தோடு  இயற்கை  மற்றும்  மெய்யியலோடு  தொடர்பு  கொண்டது. கவித்துவம்  கொண்டது.  இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொ