இடுகைகள்

ஏப்ரல் 22, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 03

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- தன்னம்பிக்கை கவிதை --------------- தனக்கிருக்கும்..... உறுதியான சக்தி ...... தன்னம்பிக்கை..............! தன்மானம் காத்திட ..... தலைசாயாத சக்தி .... தன்னம்பிக்கை.............! எல்லாமே இழந்தாலும் .... எஞ்சியிருக்கும் சக்தி .... தன்னம்பிக்கை...............! உயிரே போனாலும் ............. உயிர்த்தெழும் சக்தி ........... தன்னம்பிக்கை...........! இரக்க பார்வையை ...... இல்லாதொழிக்கும் சக்தி ..... தன்னம்பிக்கை............! எல்லாம் சாத்தியமே என்று ...... அறிவை நம்பும் சக்தி ........ தன்னம்பிக்கை.............! ^^^ கவிப்புயல் இனியவன் தன்னம்பிக்கை கவிதை 

பொருளாதாரக்கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- பொருளாதாரக்கவிதை --------------- ஏழையின் வீட்டில் ... பசி வயிற்றில் பிறக்கிறது ... செல்வந்தன் வீட்டில் ... பசி கண்ணில் பிறக்கிறது ...! ஏழையின் வீட்டில் ... வயிறு அடுப்பாக எரியும் ... செல்வந்தன் வீட்டில் ... அலங்காரமாய் அடுப்பு எரியும்....! ஏழையின் வீட்டில் ... பசி நோய்க்கு காரணி .. செல்வந்தன் வீட்டில் ... நோய்நீக்கும் காரணி பசி ...! ^^^ கவிப்புயல் இனியவன் வறுமையின் கொடுமை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 01

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் --------------- நகைச்சுவை --------------- ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே குதி இருக்குது உன் கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர கண்டதையும்வைதிருந்தவளே கை இருக்குது உன்கைப்பை எங்கே ...? கண்டதையும் ........ பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... முகம் இருக்குது உன் அழகு எங்கே ..? ^^^ கவிப்புயல் இனியவன் கானா நகைச்சுவை கவிதை 

நான்குவரி கவிதை

தலைப்பு "அல்லியின் காதல் " --------------------------------- நான்குவரி கவிதை --------------------------------- நிலவொளியால் பருவமடையவைத்தவனே..... காதல் தடாகத்தில் காத்திருக்கவைத்தவனே.... மழைத்துளியாய் என்மேனியை வருடுகிறவனே அல்லி நான் உன்னை அள்ளத்துடிக்கிறேன்........ ^^^ கவிப்புயல் இனியவன்

வறண்டிருக்கும் மண்ணுக்கும்

தலைப்பு "மழைத்துளி " --------------------------------- தள்ளுவண்டிக்காருக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு மழைத்துளி  ஒரு விஷத்துளி...! வறண்டிருக்கும் மண்ணுக்கும் குடத்தோடு நிற்கும் பெண்ணுக்கும் மழைத்துளி ஒரு அமிர்ததுளி....! கைகோர்த்து செல்லும் காதலருக்கும் பள்ளிவிட்டுவரும் பிள்ளைகளுக்கும் மழைத்துளி ஒரு இன்பத்துளி.....! ^^^ கவிப்புயல் இனியவன் 22.04.2017 அன்புடன் நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் நிலாமுற்றம் குழுமம்

விருந்து

விருந்து நான்கு வரிகவிதை ----------------- விருந்து உறவுகலுக்கு கொண்டாட்டம் வீட்டிலுள்ள சேவலுக்கு திண்டாட்டம் உள்ளவனுக்கு செய்தால்  நஞ்சு இல்லாதவனுக்கு செய்தால் தொண்டு ^^^ கவிப்புயல் இனியவன் 21.04.2017 to 22.04.2017