நாஸ்ட்ரடாமஸ்

உலகத்தின் எதிர்கால நிகழ்வுகளை மிகத்துல்லியமாக கணித்து அதன் மூலம் உலக வ்ரலாற்றை எழுதிய தீர்க்கதரிசிகளில் மிகப்பிரபலமாணவர்தான் நாஸ்ட்ரடாமஸ்.இவரின் THE CENTURIES என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகின்ற நூல்.இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்துவிட்டிருக்கின்றன.1568 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட மூலப்பிரதியில் இருந்து இன்றுவரை எழுத்துப்பிழைகள் சொற்பிழைகள் இன்னும் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலக வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்திருக்கிறார்கள்.அவர் தனது நூலில் பலவற்றினை புதிர்போலவும் குறியீடுகளாகவும் சொல்லிச்சென்றார்.காரணம் தவறான யாரும் தவறான முறையில் அவற்றினை பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான். நாஸ்ட்ரடாமஸ் தந்தை ஜாக்ஸ், பரம்பரையாக தானிய வியாபாரம் செய்கிற குடும்பம்.ஜாக்ஸ் தனது தந்தை பியரின் அனுமதி பெற்று, அவர்களுடைய குடும்ப நண்பரான டாக்டர் ஜீன் என்பவருடன் தங்கியிருந்து கல்வி பயின்றார்.வியாபாரத்தில் நாட்டமில்லை அவருக்கு.டாக்டர் ஜீன் கணிதம்,வானியல்,சோதிடம்,மருத்துவம் மற்றும் கிரீக், லத்தீன், ஹீப்ரு மொழிகளில் தேர்ந்தவ...