தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ்


இந்த உலகில் ஏராளமான தீர்க்கதரிசிகளும், தீர்க்க தரிசனங்களும் உலகம் முழுவதும் உண்டு. ஆனால் இவர்களிலிருந்து நாஸ்டர் டாமஸ் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எழுதி வைத்த தீர்க்க தரிசனங்கள் அனைத்துமே தெளிவானவைகள்.  மிக துல்லியமான கணக்கின் விடைபோல தெரியகூடியவைகள்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.ஆனால் துரதிஸ்டவசமாக அவர் எழுதி வைத்துள்ள பாடல்களை சாதாரணமாக படித்து புரிந்து கொள்ள முடியாது. சம்பவம் நடந்த பிறகு அடடா இதை தான் அவர் அப்படி சொன்னாரா?  என்று துன்பப்படவைக்கும.  ஏன் அவர் தெரிந்த புரிந்த பாஷையில் தெரியாத வகையில் எழுதிவைத்துள்ளார் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது ஆச்சர்யமான ஒரு உண்மை தெரியவருகிறது.

பிரான்ஸில் ஒரு சிற்பி செய்த கன்னிமேரியின் சிலையைப் பார்த்து, நாஸ்டர்டாமஸ் அது கன்னி மேரியின் சிலை இல்லை. பேயின் சிலை என்றார். அது சிற்ப சாஸ்திரப்படி
இல்லையென்பதற்காகவே அப்படிச் சொன்னார்.

அரசாங்கம் அவரை நாத்திகன் என்று சொல்லிக் கைது செய்ய உத்தரவிட்டது. அவர் அதிலிருந்து தப்பி ஊரைவிட்டே ஓடினார். ஆறு ஆண்டுகாலம் நாடோடி
யாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டுப் பின் மறுபடியும் பிரான்ஸிற்கு வந்தார்.

1555 ஆம் ஆண்டுதான் தன்னுடைய முதல் நூலை எழுதி முடித்தார்.நாஸ்டர்டாமஸின் நூல்கள் லத்தீன் பேச்சு மொழியில் கவிதை நடையில் அமைந்திருந்தன. பாட்டிற்கு எட்டு வரிகள் வீதம் தலா நூறு பாடல்களைக் கொண்ட பத்து தொகுதிகளாக அவைகள் அமைந்திருந்தன.

அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாராவது ஆரூடம் சொன்னால் அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி உயிரோடு எரிக்கவே கிளம்பி விடுவார்கள். அதோடு அரசால் மோசடி ஆசாமி என்று கைது செய்யப்படும் சூழ்நிலையும் நிலவியது.அதனால்தான் அவர் பல எதிர்கால நிகழ்வுகளை கணிப்புக்களை ச்ங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.

பிற்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறியும் சக்தி அவருக்கு எப்படி ஏற்பட்டது என்று அவர் ஏதும் குறிப்பு எழுதிவைக்கவில்லை. ஒருமுறை ஒரு சிறு கிராமத்திலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த இளம் சன்னியாசி ஒருவரைக் கண்டார். உடனே அவர் இருந்த இடத்திற்குச்சென்று தொப்பியைக் கழற்றிவிட்டும் மண்டியிட்டு அந்த சன்னியாசியின் அங்கியின் நுனியை எடுத்து வணக்கத்துடன் முத்தமிட்டார்.

ஒன்றுமறியாத சன்னியாசி காரணம் கேட்டதற்கு அவர் பிற்காலத்து போப் ஆண்டவருக்குத் தம் வணக்கத்தைத் தெரிவித்ததாகக் கூறினார். 1551-ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றிய ஜோதிடக் கணிப்புகளை 1550-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

அவரது மகனுக்கே அவர் ஒரு எச்சரிக்கையை சங்கேத மொழியில் அளித்திருந்தார். ஒரு கடித வடிவில் அது இருந்தது, சீஸர் என்ற பெயருடைய அவரது மகன் 22ம் வயதில் தன் தந்தையின் பெயரைத் தீய வழியில் பயன்படுத்துவார் என்றும் அது அவருக்கு நலம் பயக்காது என்றும் எச்சரித்திருந்தார் நாஸ்டர்டாமஸ்.இதை அலட்சியப்படுத்திய சீஸர், தந்தையைப் போல் பலன்கள் கூற வேண்டும் என்ற ஆர்வத்தில் விவாரிஸ் என்ற நகர் அழியப் போகிறது என்று ஆரூடம் கூறினார். ஆனால் அரசாங்கப் படைகளின் பாதுகாப்பில் இருந்த அந்த நகரத்திற்கு ஒரு ஆபத்தும் நேரவில்லை. மக்கள் சீஸரைச் சூழ்ந்து கொண்டு எப்போது நமது நகரம் அழியப் போகிறது என்று கேட்கலாயினர். பளீரென்று சீஸர் 'இன்னும் மூன்று நாட்களில்' என்றார். அடுத்த நாள் இரவு அவரே நகருக்குத் தீ வைக்க முயன்ற போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசாங்க வீரர்களால் கொல்லப்பட்டார்.

இதே போல நடந்த இன்னொரு விசித்திரமான சம்பவம் அவர் புகழை வெகுவாகப் பரப்பி விட்டது. புகழ் பெற்ற மருத்துவராகவும் தீர்க்கதரிசியாகவும் அவர் திகழ்ந்ததால் பிரான்ஸிலுள்ள பெரும் தனவந்தர்களும் பிரபுக்களும் அவரை அழைத்துத் தங்கள்குறைகளைப் போக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்தது, ஒரு சமயம் லொரெய்ன் என்ற மாகாணத்தில் இருந்த பெயின்ஸ் கோட்டையின் உரிமையாளரான லார்ட் ப்ளோரின்ஸ்வில்லி அவரை அழைத்தார். அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பிரபு ப்ளோரின்ஸ்வில்லி கேட்டுக் கொள்ளவே சலான் என்ற தனது நகரிலிருந்து பயணப்பட்டு லொரெய்ன் வந்து தன் சிகிச்சையைத் தொடங்கினார் நாஸ்டர்டாமஸ். சீக்கிரமே அவர் குணமடைந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிரபு தன் தாயார் குணமடைந்ததைக் கொண்டாட ஒரு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்து நடக்கும் நாளன்று காலையில் தோட்டத்தில் நாஸ்டர்டாமஸுடன் அவர் உலாவச் சென்றார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு குட்டிப் பன்றிகள் இருந்தன. ஒன்றின் நிறம் கறுப்பு. இன்னொன்றின் நிறம் வெள்ளை. அதைச் சுட்டிக் காட்டிய ப்ளோரின்ஸ்வில்லி நாஸ்டர்டாமஸிடம் கிண்டலாக "இந்த இரண்டு பன்றிகளின் எதிர்காலம் பற்றிச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். நாஸ்டர்டாமஸின் உண்மையான பெருமை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இரண்டு பன்றிகளையும் உற்றுப் பார்த்த நாஸ்டர்டாமஸ் ப்ளோரின்ஸ்வில்லியிடம் "இதோ இந்த கறுப்புப் பன்றி ஒரு ஓநாய்க்கு உணவாகப் போகிறது. இதோ இந்த வெள்ளைப் பன்றி நமக்கு இரவு விருந்தில் உணவாகப் போகிறது" என்றார். ப்ளோரின்ஸ்வில்லி இதைப் பொய்யாக்கி விட வேண்டுமென்று எண்ணம் கொண்டு தனது சமையல்காரரை ரகசியமாக அழைத்து கறுப்புப் பன்றியை விருந்து உணவிற்குக் கொல்லுமாறு கட்டளையிட்டார். இரவு விருந்தில் தனது அருகில் உட்கார்ந்திருந்த நாஸ்டர்டாமஸிடம் "உங்கள் கூற்றுப் பொய்யாகி விட்டது. இதோ நாம் சாப்பிடுவது கறுப்புப் பன்றியைத்தான்" என்றார். நாஸ்டர்டாமஸோ சிரித்தார். "இல்லை, இது நான் சொன்ன வெள்ளைப் பன்றிதான்" என்றார்.

உடனே பிரபு தன் சமையல்காரரை அழைத்தார். சமையல்காரர் நடந்ததை விளக்கினார். "கறுப்புப் பன்றியைக் கொன்ற பின்னர் சில நிமிடம் நான் வெளியே போனேன். அப்போது ஒரு நொண்டி ஓநாய் உள்ளே வந்து அந்த மாமிசத்தை உண்டு விட்டது. வேறு வழியின்றி வெள்ளைப் பன்றியையே சமைத்தேன்" என்றார்.

இந்த விஷயம் வெளியில் பரவவே நாஸ்டர்டாமஸின் புகழ் பெருமளவில் பரவியது. அவரை பய பக்தியுடன் அனைவரும் வணங்கினர்.

இன்னொரு சம்பவம்: ஒரு நாள் மாலையில் அவரைத் தாண்டிச் சென்ற ஒரு இளம் பெண் தனது மாலை வணக்கத்தைத் தெரிவித்து அருகிலுள்ள காட்டில் சுள்ளிகளைப் பொறுக்கப் போவதாகச் சொன்னாள். நாஸ்டர்டாமஸும் அவளிடம் "மாலை வணக்கம் இளம் பெண்ணே" என்று கூறினார். சற்று நேரம் கழிந்து இரவான போது அவள்திரும்பி வந்தாள். அவருக்குத் தனது இரவு வணக்கத்தைத் தெரிவித்தாள்.
நாஸ்டர்டாமஸ், "மாலை வணக்கம் கூறிய போது இளம் கன்னியாகப் போனாய்; இப்போது இளம் மனைவியாக வந்து விட்டாயே" என்று சிரித்துக் கொண்டே கூறினார். அரண்டு திகைத்துப் போன அவள் ஓடியே விட்டாள். தனது காதலனைக் காட்டில் சந்தித்த அவள் கன்னிமை இழந்ததை நாஸ்டர்டாமஸ் போகிற போக்கில் கூறியது அவரது எதையும் உணரும் ஆற்றலை உணர்த்தியது.

அவர கூறியபடி அத்தனை நிகழ்ச்சிகளுமே நடந்துவிட்டன. ஆகவே அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சொந்தமாகப் பஞ்சாங்கம் தயாசூச்த்து வெளியிடலானார்.

இச்சமயத்தில்தான் உலகின் வருங்காலத்தைப் பற்றி ஆராயலானார். ஈராண்டுகள் மிகவும் பிரயாசைப்பட்டு கி.பி.1553-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 3797-ஆம் ஆண்டுவரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளச் சுலோகங்களாக இயற்றிவைத்தார்.
ஹென்றி மன்னனுக்கு மரண ஆரூடம் அப்போது பிரான்ஸை ஆண்டவர் இரண்டாம் ஹென்றி மன்னர். அவர் எப்போது எப்படி இறப்பார் என்று முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ்
தம்முடைய சுலோகத்தில் கூறியிருந்தார். அதன்படி ஒரு வீர விளையாட்டின்போது அவர் இறந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பொன்னாலான முகக்கவசத்திலுள்ள துவாரத்தின் வழியாக போட்டியாளாச்ன் ஈட்டி நுழைந்து அவருடைய கண்ணில் பாய்ந்து மூளைக்குச் சென்று முனை முறிந்து விட்டது. கவசத்தையும் கழற்றமுடியாமல் ஈட்டிமுனையையும் எடுக்க முடியாமல் ஹென்றி துடிதுடித்து இறந்தார்.

இதையெல்லாம் முன்கூட்டியே அறிவித்த நாஸ்ட்ரடாமஸின் சுலோகங்களால் கவரப்பட்டாள் பிரெஞ்சுப் பேரரசி, கேத்தாச்ன் டி மெடிச்சி. ஸொலோன் நகரத்துக்கு தானே நோச்ல் சென்று நாஸ்ட்ரடாமஸைக் கேத்தாச்ன் சந்தித்தார். 45 நாட்கள் மந்திசூனிகம், ஆவிகளின் தொடர்பு, வானநூல் போன்ற முறைகளைக் கடைபிடித்து வருங்கால நிகழ்ச்சிகளை ஒரு கண்ணாடியின் மூலம் பேரரசியைக் காணவைத்தார். சைத்தானின் சீடரா?அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட ஜோதிடர் என்ற முறையிலேயேபொன்னும் பொருளும் புகழும் பெற்றார் .

மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!   "என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார்.   1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர். பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட நேரம் அது! மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரான அவரது மண்டை ஓட்டில் ஒயினை ஊற்றிக் குடித்தால் எதிர்காலம் கூறும் பிரபல ஜோதிடர் ஆகலாம் என்று நம்பி அந்த மூன்று பேரும் கல்லறையைத் தோண்டியிருந்தனர். அதில் ஒருவன் மண்டையோட்டை எடுத்து பையில் இருந்த ஒயினை எடுத்து அதில் ஊற்றிக் குடித்து விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவனைத் துளைத்து அவன் உயிரைக் குடித்தது. புரட்சிக்காரன் ஒருவனின் குண்டுதான் அவனை இறக்க வைத்திருந்தது.   மற்ற இரண்டு பேரும் திரும்பி எலும்புக்கூட்டைப் பார்த்த போது எலும்புக்கூட்டின் மார்பில் ஒரு தாமிரத் தகடு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தனர். அதில் மே 1793 என்று எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே 1793ம் ஆண்டு மே மாதம் தான் அந்த எலும்புக்கூட்டை அவர்கள் தோண்டி எடுத்திருந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் ஓடத் தொடங்கினர்.   தன் கல்லறையை எந்த வருடம் எந்த மாதம் தோண்டி தன் எலும்புக்கூட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துச் "சொல்லியிருந்தது" உலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி