தமிழ் இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. சமூகப் பொருளாதார அரசியல் சூழல்களே இம்மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் எனலாம். அறிவியலின் நவீன வளர்ச்சி உலகின் பரப்பை சுருக்கிவிட்டது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மொழிபெயர்புக் கலையின் வளர்ச்சியினாலும் பிற நாட்டு இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், வடிவங்கள் போல் வன தமிழில் தலை எடுக்கத் தொடங்கின. இவ்வகையில் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவம் தான் "சென்ரியூ" கவிதை வடிவம். "சென்ரியூ" - தோற்றம் சென்ரியூ கவிதைகளின் தோற்றம் குறித்துப் பொதுவாகச் சொல்வதெனில் இஃது ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியது என்று கூறிவிடலாம் என்றாலும் ஹைகூவிலிருந்து சென்ரியு தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டதற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. 1980 ஆம் ஆண்டு "அன்றாடமை" என்னும் தலைப்பில் சென்ரியூ அங்கதக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. இதன் தொகுப்பாசிரியர் மேரி கேசல் என்பவர் இந்நூலின் முன்னுரையில் "ஹைகூவின் அங்கத வடிவம் சென்ரியூ. ஹைகூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில்,...