இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஃகம் சுருக்கேல்

இந்த 45 சொற்களில் மிக குறைவான சந்தர்பங்களில் ஏழு அல்லது எட்டு சொற்களையே செந்தமிழில் பயன்படுத்துகிறோம். நாற்பத்தைந்தே சொற்கள் என்பதால், பட்டியல் இடுவது எளிது என்பதனால், ஒரு பதிவு கருதி அவற்றைக் கீழே தருகிறேன். 1. அஃகடி – அக்கடி, துன்பம் 2. அஃகம் – தானியம், நீரூற்று, முறைமை 3. அஃகு – தகுதி, ஊறு நீர் 4. அஃகரம் – வெள்ளெருக்கு 5. அஃகான் – The letter of அ. அகரம் 6. அஃகுதல் – அளவில் குறுகுதல், சுருங்குதல், மனம் குன்றுதல், நுண்ணிதாதல், கழிந்து போதல், குவிதல் – ‘ஆம்பல் அஃகுதலும்’ 7. அஃகுவஃகெனல் – Expression of restless wanderings. அஃகு அஃகு எனல். 8. அஃகுல்லி – உக்காரி எனும் சிற்றுண்டி (பிங்கல நிகண்டு) 9. அஃகேனம் – The letter ஃ. ஆய்த எழுத்து 10. அஃதான்று – Besides 11. அஃது – அது 12. அஃதே – Indeed, Alright. அப்படியே. 13. அஃதை – சோழன் ஒருவனின் மகள் 14. அஃபோதம் -சகோலப் பறவை (பிங்கல நிகண்டு) 15. அஃறிணை – அல் திணை 16. இஃது – இது 17. எஃகம் – எஃகு, எஃகாயுதம், வாள், வேல், சக்கரம், பிண்டி பாலம் (Javelin) , சூலம் (Trident) 18. எஃகுதல் - To pull with fingers, as cott

கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்

!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!! இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!! !!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!! கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி........ ..........எதற்கு அஞ்சாத வீரமங்கை....................... பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ................. ..........பத்தினியாள் பக்தியாள்............................ சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் ........ .........சினப்பனோடு சீராக வளர்ந்தாள்............... சின்னப்பனின் திணிப்புக்கு உள்ளானாள்.......... .........சீற்றம் கொண்டாள்  சிங்கம்போல் ............ சித்தப்பனின் திருமணதிணிப்பை தூக்கியெறிந்தாள் .....!!! !!!............மங்கையர்க்கரசியின் காதலன்குணயியல்பு .................!!! தந்தை பெயரோ கருணாகர தொண்டமான்....... ..............காதலன் பெயரோ கருணாகரன

கவிதை மற்றும் கட்டுரைகள்

கவிதை மற்றும் கட்டுரைகள் எழுத தலைப்புப் பரிந்துரைகள் கவிதை: மழை இரண்டு வரி கவிதை பசிக்கொடுமை பச்சை புல்வெளி நண்பர் பிறந்த நாள் கவிதை கிராமத்துப் பெண்கள் நண்பிகள் மங்கையர் கரசியின் காதல் சுற்றுசுழல் மாசுபாடு கவிதை புயல் வெள்ளம் நெஞ்சு பொறுக்கதில்லையே கட்டுரை: மின்சாரா சிக்கனம் சென்னையும் ஏரிகளும் தூய்மை இந்தியா தேசிய ஒருமைப்பாடு நூலகம் கம்ப்யூட்டர் கல்வியின் சிறப்பு கூட்டுறவு உழைப்பே உயர்வு இன்றைய உலகமும் விஞ்ஞானமும் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு கிராமம் மரம் வார்ப்போம் சுற்று சூழல் பாதுகாப்பு மழை தன் வரலாற்றைக் கூறுதல் ஐவகை நிலங்கள் பற்றிய கட்டுரை குறிஞ்சி நிலம் நம் நாடு நம் வீடு

நண்பன் -வாழ்த்தியது

படம்
7000ம்   பதிவுகள் தொட்ட கவிப்புயல் இனியவன் ஐயா அழகிய கவிதைகளை  பனி மழையாக தூவி சேனையெங்கும் பரவச்செய்த கவிப்புயலே உமது பணி இனிதே தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன் உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன் தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு குழந்தைச்செல்வங்கள் பெருகி என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல ஊரார் பாராட்ட கலந்து மகிழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்        நன்றியுடன் நண்பன்        

7000 பதிவுகள் கடந்த கவிப்புயலை வாழ்த்துவோம்

படம்
 by  நேசமுடன் ஹாசிம்  Today at 11:35 + கவிதைக் களஞ்சியமாய்  தொட்டதெல்லாம் கவிதையாக்கி  உலகவலம் கவிதைகளால் உருவாக்கி தமிழுக்கு ஆற்றும் தொண்டினை  பதிவுகளாக்கி சேனையில் கடந்துவிட்டீர்கள் 7000 உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்  தொடருங்கள் என்றும் சேனை உலாவுடன்  எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உங்கள் வழியில் 

கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

JINNA  • நேற்று 11:13 pm தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்...  இப்போது நீங்களும்...  அருமை...  வாழ்த்துக்கள் தொடருங்கள்... @ கே இனியவன்  • 1 வினாடிக்கு முன் மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு  இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன்  ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

மனமார்ந்த நன்றி உறவுகளே

பறக்கிறது பட்டமில்லை கற்பனை + இதை எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை,   மகா கவிஞர் ரசிகை ; செல்வி நிலா முற்றம் தளம் 11.09.2015 @@@@@ ------------------------------------------------------------------------------------ என் கஸல் கவிதைக்கு அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்கள் ---------------------------------------------------------------------------------- சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற " எம் சேனையின் கவிப்பேரரசை " மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன் ----------------------- மிக்க நன்றி உண்மைதான் கஸல் கவிதை எழுதும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது அந்தளவுக்கு நான் காதல் வலி உடையவன் அல்ல . என் கஸல் கவிதையை பார்த்த முகநூல் உறவுகள் பலர் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கு என்கிறார்கள் . முகநூல் உறவுகளின் உணர்வுகள் பல என்னை அதிர வைத்துள்ளது .பலரின் உண்மை சம்பவங்கள் கூட என்னிடம் கூறி இருக்கிறார்கள் . மு

தேர் திருவிழா

நினைத்து பார்க்கிறேன் கோயில் திருவிழாவை பத்து நாள் திருவிழாவில் படாத பாடு பட்டத்தை ...!!! முதல் நாள் திருவிழாவிற்கு குளித்து திருநீறணிந்து பக்திப்பழமாய் சென்றேன் பார்ப்பவர்கள் கண் படுமளவிற்கு....!!! இரண்டாம் நாள் திருவிழாவில் நண்பர்களுடன் கோயில் வீதி முழுவதும் ஓடித்திரிவதே வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் திட்டும் வரை ....!!! மூன்றாம் நாள் திருவிழாவில் மூண்டது சண்டை நண்பர்கள் மத்தியில் - கூட்டத்துக்குள் மறைந்து விளையாட்டு ....!!! நாளாம் நாள் திருவிழாவில் நாலாதிசையும் காரணமில்லாது அலைந்து திரிவேன் ...!!! ஐந்தாம் நாள் திருவிழாவில் சேர்த்துவைத்த காசை செலவளித்து விட்டு வெறும் கையோடு இருப்பேன் ...!!! ஆறாம் நாள் திருவிழாவை ஆறுதலான நாளாக கருதி வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!! காத்திருப்பேன் தேர் திருவிழாவை -அப்பாவின் ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு அப்பாவும் படியளர்ப்பார் அம்மாவும் படியளப்பா ....!!! தேர் திருவிழா இறைவனின் அழித்தல் தொழிற்பாடாம் அழித்துவிடுவோம் முன்னர் ஏற்பட்ட நண்பர் பகையையும் கொண்டு சென்ற காசையும் ...!!! காலம் தான் மாறினாலும் அந்த நினைவுகள் -காலம் காலமாய

யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

அதிகாலையில் துயில் எழுந்து ... தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ... தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ... கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ... தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ....? கொட்டும் மழையில் உடல்விறைக்க... உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ... குருதியே வியர்வையாய் வெளிவர .... உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ... காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ....? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி .... விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு ... அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ....? உச்ச அறுவடை பொழுதினிலே ... உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே .. நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்... பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான .... விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் ..... அப்போதும் சிரித்தமுகத்துடன் .... அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் ..... இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட..... யாருக்கு வரும் இந்த தைரியம் ....? நச்சுபொருளுட

நான் எழுதுவது கவிதை இல்லை

கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை மறந்து கதைக்கும் காதலரை பார்க்கிறேன் காதல் கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? சின்ன வயதில் எல்லோருக்கும் காதல் தோல்வி வரும் -அதை மீட்டு பார்க்கும் போது உயிரே வலிக்கும் .வந்த வலியை கொண்டு காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுது

மறுபடியும் உனக்கு மகனாய் பிறக்க வேண்டும்

அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என்பேன் -உலகிலேயே அப்படி சொன்ன முதல் பிள்ளை என்பது போல் இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள் என்பது போல் உள்ளம் குளிர்வாய் .. தாயே .....!!! நான் பெற்ற சின்ன வெற்றிகளை உலகசாதனைபோல் ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கும் -உன் கதையை மற்றவர்கள் -அலட்டல் என்று சொல்வார்கள் -எனக்கு அதுதான் தாயே எனக்கு -உன் ஊட்ட பானம் தாயே

என் ஊரை காணவில்லை...?

நான்கு திசையும் வயல்கள் நாலாபுற‌மும் குளங்கள் ஊர் மத்தியில் அம்மன் ஆலயம் எல்லை புறத்தில் வீர‌ பத்திரர் பைரவர் அய்யனார் ஊரை காக்கும் கடவுள்களாய்.....!!! சிறு படகுடன் நிறைந்த‌ கடற்கரை தொலைதூரத்தில் உடைந்த‌ கட்டுமரங்களும் ஆங்காங்கே சிதறிகிடக்கும் வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள் கிராமிய‌ பண்பாட்டை மாற்றாத‌ வாழ்க்கை முறை....!!! மாலை நேரத்தில் ஆலமரத்தடி அறிவு தாத்தாக்களின் மன்றம் மழைக்கு கூட‌ பாடசாலை பக்கம் ஒதுங்காதவர்கள் புராணக்கதையிலும் உலக‌ நடப்பிலும் படிக்காதமேதைகள்.......!!! பச்சை மரமொன்றில் பழங்கள் எதுமில்லை கறுப்பாய் ஒரு கனி அதன் பெயர் தேன் கூடு அதற்கு ஒரு கல்லால் எறிந்து தேனிகலைக்கும்போது தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்....!!! இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌ அற்புத‌ மனிதன் நான் காலம் கடந்து என் பிள்ளையுடன் என் ஊருக்கு போனேன் கனவுகளுடன் அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள் முடங்கி இருந்தால் என் தாய் காவல் தெய்வங்கள் இருந்த‌ கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ......!!! என் கனவு மட்டும் தவுடு பொடியாகவில்லை என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது ஆலமரம் கூட‌ அங்கவீனம

உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்

நீ ஒருமுறை கண் சிமிட்டினால் ஓராயிரம் கவிதை எழுதும் நான் - ஒரு நொடி பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....!!! உயிரே மௌனத்தால் கொல்லாதே ...!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** உன் வீட்டு முககண்ணாடியாய் இருந்திருக்க வேண்டும் உன் அத்தனை அழகையும் ரசிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பேன் ...!!! உன் உதடு பூசும் மையாக இருந்திருந்தால் ஒயாத முத்தம் தந்திருப்பேன் .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** காற்றுக்கு வாசனை இல்லை ஆனால் நீ வரும் போது உணர்கிறேன் காற்றில் வாசனையை ....!!! நீருக்கு நிறம் இல்லை நீ நீராடும் போது பார்கிறேன் அதன் நிறத்தை .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் ************************ என் பஞ்ச வர்ணகிளியே நீ தினமும் அணியும் ஆடைகள் உன்னை அப்படி அழைக்க தூண்டுதடி ...!!! பச்சை கிளிக்கு முன்னால் வந்து விடாதே உன் கொவ்வை இதழை கொத்திவிட்டு சென்று விடும் .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் ********************** என்னை பொறுத்த மட்டில் நீ ஒருகாதல் முத்து ....!!! ஒருதுளி மழைநீர்தான் சிப்பிக்குள் முத்தாகிறது

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி ************************* என் இதயத்தில் குடியிருப்பவளே மெதுவாக மூச்சு விடுகிறேன் -என் மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது ------------------------------- கல்லை செதுக்கினேன் உன் உருவம் கண்ணால் செதுக்கினேன் நம் காதல் இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!! ------------------------------- காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும் கவிதை எழுது உலகம் சுத்தமாகும் இரண்டையும் செய்பவன் ஞானி ------------------------------- உலக போதையிலேயே கொடூரம் உன் போதை கண் தான் -இன்னும் போதையில் இருந்து மீளவில்லை ------------------------------- நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார் நீ கண் திறந்த போது நான் எரிந்தேன் முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...? ------------------------------ நீ வேறு நான் வேறு இல்லை வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை --------------------------------------- நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால் வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன் இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன் -------------------------

காதல் அணுக்கவிதைகள்..!!!

படம்
கே இனியவன் அணுக்கவிதை ************* நெருப்பில் கருகியவர்கள் பலர் உன் சிரிப்பில் கருகியவன் நான் தான் ...!!! மன காயப்படும் கூட‌ ஆறுதல் சொல்ல‌ நீ வருவாய் என்று ஏங்குது சொற‌ணை கெட்ட‌ என் இதயம்....!! இதயம் துடிக்க‌ காற்று தேவையில்லை காதல் போதும் ...!!! நீ காதல் கொண்டு பார்க்கிறாய் -என்ன செய்வது உன்னில் காதல் வரமாட்டேன் என்கிறதே .....!!! நாம் காதலர் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை நம்பும் படியாக நீ மாறவில்லை ....!!! ஒன்றில் நீ பேசு அல்லது உன் கண் பேசட்டும் இரண்டும் பேசினால் நான் எப்படி பேசுவது ...? அவளுக்கு இதயம் இருக்கும் இடத்தில் முள் கம்பிகள் இருக்கிறது போல் இப்படி வலி தருகிறாள் ..? உன் சின்ன சிரிப்பு போதும் என் நெஞ்சில் இருக்கும் வலியை உடைத்தெறிய ....!!! நான் எழுதுவது உனக்கு ஒருவரி கவிதை - அது என் இதய வலி கவிதை நான் தற்கொலை செய்ய மாட்டேன் - நீதான் என்னை தினமும் கொல்கிறாயே...!!! உன்னை அணு அணுவாக காதலிக்கிறேன் -உனக்கு அணுக்கவிதை எழுதுகிறேன் * * கே இனியவன் அணுக்கவிதை கே இனியவன்

நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

பொய் சொல்லவத்தில்லை உண்மையை மறைத்திருகிறோம் இதை விட கொடுமை பாதி உண்மை பேசியிருக்கிறோம் - கொடுமையில் கொடுமை பாதி உண்மை பேசுவதுதான் -இதை எல்லாம் செய்து விட்டு நல்லவனாக வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!! @@@@@@ தப்பு என்று தெரிந்து கொண்டு தப்பு செய்திருக்கிறோம் -ஆனால் மற்றவர்கள் செய்யாத தப்பையா நான் செய்கிறேன் என்று சமுதாயத்தை அடமானம் வைத்து தப்பு செய்கிறோம் நல்லவனாக நன்றாக நடிக்கிறோம் .....!!! @@@@@@@ திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் என்று நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ... நன்றாக நடிக்கிறோம் .....!!! @@@@@@ ஊன் உண்ணாதே களவெடுக்காதே சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும் பாடம் - ஆனால் மாமிசம் உண்போம் பசு கன்றின் பாலை களவெடுத்து குடிப்போம் - கேட்டால் சொல்வோம் அவையெல்லாம் எமக்காக படைக்கபட்டவை - எமக்கே உரியவை என்று வியாக்கியானம் சொல்வோம் நன்றாக நடிக்கிறோம் .....!!! @@@@@@ பிறர் மனம்

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

படம்
உனக்காக  எதையும் தாங்குவேன்  நான் சுயநலவாதி இல்லை  உன் இன்பத்தில் மட்டும்  பங்குகொள்ள ......!!! நீ காதலில் ஒரு நாணயம்  இரண்டு பக்கமும் விழுகிறாய்  நீ எந்த பக்கம் விழுவாய் என்ற  ஏக்கத்துடன் வாழ்கிறேன்  அதிலும் சுகமுண்டு ....!!! உன்னுடன் பேச வேண்டும் உன்னுடன் மட்டும் பேச வேண்டும் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் உள்ளதை உள்ளபடி பேசவேண்டும் உண்மையுடன் பேசவேண்டும் ...!!! என்ன பேசப்போகிறாய் ..? என்கிறாயா ..? எப்போது ..? என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..? எல்லாம் உன்னை பற்றி தானே எப்போதும் பேசுவேன் என் உயிர் நீ தானே உயிரே ...!!! படையில் எல்லாம் இழந்து ... நிற்கும் வீரனைப்போல்...  உன்னிடம் எல்லாவற்றையும் ... வழங்கி இப்போ ஒன்றும்  இல்லாமல் நிற்கிறேன் ...!!! என்று இழக்கமாட்டேன்  நீ தந்த நினைவுகள்  நான் கொண்ட உண்மை காதல்  உனக்காக எழுதிய கவிதை  நீ தந்த நினைவு பரிசு ...!!! எத்தனை எத்தனை பெண்கள் என் முன்னால் சென்று விட்டார்கள் - உன் வரவை எதிர் பார்த்த கண்கள் சோர்கிறது ...!!! எனக்கு இரண்டு இதயம் வேண்டும் -ஒன்று உன்னை நினைத்து வாழுவதற்கு மற்றையது என்னை மறப்பதற்கு ...!!! பகலில் நீ எத்தனை வ