என் ஊரை காணவில்லை...?

நான்கு திசையும் வயல்கள்
நாலாபுற‌மும் குளங்கள்
ஊர் மத்தியில் அம்மன்
ஆலயம் எல்லை புறத்தில்
வீர‌ பத்திரர்
பைரவர்
அய்யனார் ஊரை காக்கும்
கடவுள்களாய்.....!!!

சிறு படகுடன் நிறைந்த‌
கடற்கரை தொலைதூரத்தில்
உடைந்த‌ கட்டுமரங்களும்
ஆங்காங்கே சிதறிகிடக்கும்
வரையறுக்கப்பட்ட‌ குடிசைகள்
கிராமிய‌ பண்பாட்டை
மாற்றாத‌ வாழ்க்கை முறை....!!!
மாலை நேரத்தில் ஆலமரத்தடி
அறிவு தாத்தாக்களின் மன்றம்
மழைக்கு கூட‌ பாடசாலை
பக்கம் ஒதுங்காதவர்கள்
புராணக்கதையிலும்
உலக‌ நடப்பிலும்
படிக்காதமேதைகள்.......!!!

பச்சை மரமொன்றில்
பழங்கள் எதுமில்லை
கறுப்பாய் ஒரு கனி
அதன் பெயர் தேன் கூடு
அதற்கு ஒரு கல்லால் எறிந்து
தேனிகலைக்கும்போது
தலை தெரிக்க‌ ஓடும் சிறார்கள்....!!!

இத்தனையும் அனுபவித்து சுவைத்த‌
அற்புத‌ மனிதன் நான்
காலம் கடந்து என் பிள்ளையுடன்
என் ஊருக்கு போனேன் கனவுகளுடன்
அம்மன் கோயில் இராஜ‌ கோபுரத்தை
காணவில்லை ‍சிறு கூடாரத்துக்குள்
முடங்கி இருந்தால் என் தாய்
காவல் தெய்வங்கள் இருந்த‌
கால‌ சுவடியை கூட‌ காணவில்லை ......!!!

என் கனவு மட்டும்
தவுடு பொடியாகவில்லை
என் ஊரும் தவுடு பொடியாகிவிட்டது
ஆலமரம் கூட‌ அங்கவீனமாய்
கிளைகள் உடைந்த்த‌ நிலையில்
வீடுகள் எல்லாம் துப்பாக்கி
துளையால் அரிதட்டானது
ஓடி விலையாடிய‌ வயலுக்குள்
இறங்க‌ விரும்பினேன் அருகில்
ஒரு பலகை ..கவனம்
வெடிக்கும் இறங்காதீர் இறங்காதீர்....!!!

என் ஊரை காணவில்லை
என் உறவுகளை காணவில்லை
ஓடி விளையாடிய‌ என் நண்பர்களை
ஓரிரு இடங்களில் புகைப்படத்தில் பார்த்தேன்
இது கவிதை இல்லை நான் நேரில்
கண்ட‌ அனுபவித்த‌ துன்பங்கள்
தூரத்தில் என் பழைய‌ நண்பன்
ஓடி வந்து கட்டிப்பிடித்தான்
முடியவில்லை அவனால்
ஒரு கை இல்லை .......!!!

(அனுபவ‌ கவிதை)

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

கவிதை மற்றும் கட்டுரைகள்