கட்டுக்கதையா அல்லது தீர்க்கதரிசியா

“யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே” பகவத்
கீதையில் வரும் இந்த புகழ் பெற்ற ஸ்லோகம் பல பேருக்கு நம்பிக்கையின் மூலமாக விளங்குகிறது. இந்த ஸ்லோகத்தில், தன் உண்மையான தோற்றத்தை பற்றி குருஷேத்ர போரின் போது கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறினார்.
அவர் கூறியதாவது, “எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைத் தூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது.”
அதாவது, மனித இனத்திற்கு தீய சக்திகளால் வரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க அவ்வப்போது பூமியில் தான் அவதரிப்பார். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம், அவர் அவதாரங்களை எடுப்பார்.
தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதே அவதாரத்தின் கடமையாகும். அதனால், பாதுகாப்பாளராக விளங்கும் விஷ்ணு பகவான், இங்கு முக்கிய பங்கை வகிக்கிறார். ஒவ்வொரு முறை கொந்தளிப்பு ஏற்படும் போதும், அவர் பூமியில் அவதரித்து, அனைத்தையும் சீர்படுத்துவார்.
04-1417678007-1-vishnu2
விஷ்ணு பகவானின் அவதாரங்கள் விஷ்ணு பகவான் தோராயமாக 25 அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் அவர் பத்து அவதாரங்களை மட்டுமே எடுத்துள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர். மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், பலராம அவதாரம் மற்றும் கல்கி அவதாரம் ஆகியவைகள் தான் அவரின் பத்து அவதாரங்கள். Show Thumbnail
vishnu
விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம் கல்கி அவதாரம் தான் விஷ்ணு பகவானின் பத்தாவது மற்றும் கடைசி அவதாரமும் கூட. கல்கி யுகத்தின் முடிவில் அவர் அவதாரமாக தோன்றுவார்.
ஆனால் சமயநூல்களின் படி, கல்கி என்பது விஷ்ணு பகவானின் 22-ஆவது அவதாரமாகும். விஷ்ணு பகவானின் கல்கி அவதாரத்தைப் பற்றி பல வதந்திகளும், கட்டுக்கதைகளும் உள்ளது.
யார் கல்கியாக இருப்பார் போன்ற சில பதிலே இல்லாத கேள்விகள் பல உள்ளது.
அவர் ஏற்கனவே பிறந்துவிட்டாரா அல்லது இனி தான் அவதரிப்பாரா? பூமியில் உள்ள மக்களின் துயரங்களுக்கு அவர் முடிவை கொண்டு வருவாரா? வேத கணிப்புகளின் படி, கலியுகத்தின் பொற்காலமான 10,000 ஆண்டு காலம் நெருங்கும் வேளையில், பொருள் இயல்பின் கீழ்மட்ட செயல் வகைகள் மிகுந்த வலுவடையும். இதனால் மக்களுக்கு ஆன்மீக விஷயங்களின் மீதுள்ள ஈடுபாடு குறையும். பலரும் நாத்தீகராக மாறி விடுவார்கள்.
04-1417678023-3-kalki-avatar
விஷ்ணு பகவானின் கல்கி அவதாரம் துறவிகளும், பக்தர்களும், மலைகளையும், குகைகளையும் தேடி செல்வார்கள். உண்மையுள்ள மற்றும் துறவி போன்ற நபர்கள் அனைவரும் பூமியில் இருந்து மறைவார்கள். அதன் பின் இந்த உலகம் இருளில் மூழ்கிவிடும். மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொள்வார்கள்.
வெகுஜன மக்கள் பலரும் கொல்லப்படுவார்கள். எங்கு பார்த்தாலும் தொடர்ச்சியாக போரும், குழப்பங்களும் நடைபெறும். கடைசியாக, கலியுகம் தொடங்கி 4,32,000 வருடங்கள் கழிந்த பிறகு, 22-ஆவது அவதாரமாக கல்கி பகவான் அவதரிப்பார்.
vishnu-1
கருமை நிற கல்கி பகவான் விஷ்ணுயாஷா என்ற இடத்தில் உள்ள ஷாம்பலா என்ற கிராமத்தில், மிகுந்த மேம்பட்ட பிராமண குடும்பத்தில் கல்கியாக பிறப்பார் என கூறப்பட்டுள்ளது.
கருமை நிறத்திலான கல்கி பகவானிடம் அதிக ஆற்றல் திறன், அறிவு மற்றும் அதிகாரங்கள் இருக்கும். தன் நல்லொழுக்கங்களின் மூலமாக இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவார். சுவாரஸ்யமாக, இஸ்லாமியம் மற்றும் இதர சில மதங்களும் கூட உலகத்தின் கருமையான நேரத்தில் கல்கி பகவானின் வருகை இருக்கும் என கூறியுள்ளது. தீய சக்திகளில் இருந்து மனித நேயத்தை காக்கவும், அவர்களுக்கு சரியான பாதையை காட்டவும், அவர் தீர்க்கதரிசியாக விளங்குவார்.
04-1417678037-5-vishnu-angkor
தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் கூற்று மிகப்பெரிய தீர்க்கத்தரிசியான நாஸ்ட்ரடாமஸ் கூறியதன் படி, மூன்று தண்ணீர் சம்பந்தப்பட்ட ராசிகளுடன் ஒருவர் பிறப்பார். அவரின் புனித தினமாக வியாழக்கிழமை இருக்கும். அவரின் பெயரும் புகழும் அனைத்து இடங்களிலும் பரவிடும். கிழக்கு பகுதிகளை பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பார்.
தீர்க்கதரிசனத்தின் படி தண்ணீர் சம்பந்தப்பட்ட ராசிகளான மீனம், கடகம் மற்றும் விருச்சிகத்தை இப்படியும் பார்க்கலாம் – இந்திய பெருங்கடல், அரேபிய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா. வியாழக்கிழமையை தான் தன் புனித தினமாக அவர் கொண்டாடுவார் எனவும் கூறுகிறது.
இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் வியாழக்கிழமை புனித நாளாக பார்க்கப்படுவதில்லை. நாஸ்ட்ரடாமஸின் வேறு சில தீர்க்கதரிசனமும் உள்ளது. தீய சக்திகளை அழிக்க அந்த மனிதர் ஒரு ஆயுதத்தை வைத்திருப்பார் என அது கூறுகிறது. குதிரையில் ஏறி வரும் கல்கி ஒரு வாளை கொண்டிருப்பார்.
vishnu-3
தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் கூற்று கலியுகம் தொடங்கி சில வருடங்களே கடந்துள்ளது. அதனால் எப்போது அந்த தீர்கத்தரிசியான விஷ்ணு கல்கி வடிவில் வருவார் என்பதை இப்போதே கணிப்பது இயலாத காரியமாகும்.
ஆனாடல் மூன்றாம் உலக போரின் முடிவில் அவர் தோன்றுவார் என பலர் நம்புகின்றனர். அப்போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து சுய ஆன்மீகத்திற்குள் மனித இனத்தை கொண்டு செல்வார்.
மனித இனம் அவர்களாலேயே பாதிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், கண்டிப்பாக அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த தீர்க்கத்தரிசி இருப்பார். அனைத்து வித இன்னல்களுக்கும் அவரே நம்பிக்கையின் ஒளியாக இருப்பார்.

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

கவிதை மற்றும் கட்டுரைகள்