நாஸ்ட்ரடாமஸ்

உலகத்தின் எதிர்கால நிகழ்வுகளை மிகத்துல்லியமாக கணித்து அதன் மூலம் உலக வ்ரலாற்றை எழுதிய தீர்க்கதரிசிகளில் மிகப்பிரபலமாணவர்தான் நாஸ்ட்ரடாமஸ்.இவரின் THE CENTURIES என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகின்ற நூல்.இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்துவிட்டிருக்கின்றன.1568 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட மூலப்பிரதியில் இருந்து இன்றுவரை எழுத்துப்பிழைகள் சொற்பிழைகள் இன்னும் தொடர்ந்தபடி இருக்கின்றன.

நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலக வரலாற்றில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருந்திருக்கிறார்கள்.அவர் தனது நூலில் பலவற்றினை புதிர்போலவும் குறியீடுகளாகவும் சொல்லிச்சென்றார்.காரணம் தவறான யாரும் தவறான முறையில் அவற்றினை பயன்படுத்திவிடக்கூடாது
என்பதற்காகத்தான்.

நாஸ்ட்ரடாமஸ் தந்தை ஜாக்ஸ், பரம்பரையாக தானிய வியாபாரம் செய்கிற குடும்பம்.ஜாக்ஸ் தனது தந்தை பியரின் அனுமதி பெற்று, அவர்களுடைய குடும்ப நண்பரான டாக்டர் ஜீன் என்பவருடன் தங்கியிருந்து கல்வி பயின்றார்.வியாபாரத்தில் நாட்டமில்லை அவருக்கு.டாக்டர் ஜீன் கணிதம்,வானியல்,சோதிடம்,மருத்துவம் மற்றும் கிரீக், லத்தீன், ஹீப்ரு மொழிகளில் தேர்ந்தவர்.அவருடைய குடும்பம் ஜூத மதத்தை தழுவியது.ஜீன் வசதியானவர்.
1501 ம் ஆண்டு பிரான்சு மன்னர் 12ம் லூயி யூதர்கள் அனைவரும் தங்கள் மதத்தை விட்டுவிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.அவர் 3 மாதகாலக்கெடு விதித்திருந்தார்.அந்த காலகட்டத்தில் ஜாக்ஸ் டாக்டர் ஜீன் வீட்டில்தான் தங்கியிருந்தார்.அவர்கள் தெற்கு பிரான்ஸின் செயிண்ட் ரெமி எனும் இடத்தில்

வசித்தனர்.டாக்டர் ஜீன் ஜாக்ஸுக்கும் தனது மகள் ரெய்னியருக்கும் 1501 ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்.அந்த தம்பதியரின் முதல் குழந்தை மைக்கல். அவருக்கு பெர்ட்ராண்ட், ஹெக்டார், ஆண்டனி என்ற சகோதரர்கள் மூவர்.ஆனால் அவர்கள் யாரும் மைக்கலைப்போல் பிரபலமாகவில்லை.

அந்த மைக்கல் தான் நாஸ்ட்ரடாமஸ், இவர் 14 டிசம்பர் 1503 இல் பிறந்தார்.குறிப்பிட்ட தேதியில்
பேரன் பிறப்பான் அவனுடைய பெயர் பிரான்ஸில் நிலைத்திருக்க்கும் என்று பியரிடம் டாக்டர் ஜீன் முன்பே கூறியிருக்கிறார்.டாக்டர் ஜீன் வீட்டில் இருந்து கொண்டு அடிப்படைக்கல்வியை கற்றார் மைக்கல்.அவருடைய மதிநுட்பத்தையும் அசாதாரண சிந்தனைத்திறனையும் கண்டு டாக்டர் ஜீன் அவருக்கு சிறு வயதிலேயே கணிதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு இவற்றைக் கற்பித்தார்.சோதிடக்கலையையும் ஆதியோடந்தம் விளக்கினார்.
டாக்டர் ஜீன் இறந்தபிறகு

நாஸ்ட்ரடாமஸ் தன்னுடைய தந்தையின் வீட்டுக்கு சென்றார்.அவர்களுடைய வீடு ரூயிடிபாரி என்ற இடத்தில் இருந்தது.கொஞ்ச காலம் தந்தைவழி பாட்டனாரிடம் கற்றார்.பிறகு உயர்கல்விக்காக அவிக்னான் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.அந்த நாளில் அதுதான் கலை இலக்கிய மறுமலர்ச்சி மையமாக இருந்தது.

1519 இல் தனது 16 ம் வயதில் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை மாணவனாகச் சேர்ந்தார்.இலக்கணம், தத்துவம், பேச்சு இவற்றில் சிறந்து விளங்கினாலும் சோதிடம் கற்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார்.பல்கலைக்கழக நூலகத்தில் பலமணி நேரம் செலவிடுவார்.சோதிடத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட அங்கே அவர் வாசித்த நூல்கள் தான் காரணமாக இருந்திருக்கின்றன. அந்த ஆர்வம் வாழ்வின் கடைசி


நாள் வரை அவரிடம் இருந்தது.தான் முதலில் படித்தறிந்த Faeimo's - De mysteries Aegyptorium என்ற நூலைக்கொண்டுதான் வரும் பொருள் உரைக்கும் முறையை உருவாக்கிக்கொண்டார் நாஸ்ட்ரடாமஸ்.இது பற்றி தம்முடைய THE CENTURIES நூலின் முதல் இரண்டு செய்யுட்களிலேயே அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி