கேள்விக்குறியில்லாத

கேள்விக்குறியில்லாத வினாத்தாள்
----------------------------------------
புதுக்கவிதைப் போட்டி
21.04.2017 - 22.04.2017
-------------------------------
பிறப்பிலிருந்து இறப்புவரை.....
வாழ்க்கையொரு .............................
கேள்விக்குறியில்லாத வினாத்தாள்
இங்கே கேள்விகள்.....
ஆயிரமாயிரம் ..........
கேள்விக்குறியில்லாததால்........
விடைகள் சந்தேகமாகிறது......!

பள்ளிப்பருவத்தில்
ஏன் படிக்கின்றாயென்று
கேட்டார் தாத்தா.......
சந்தோசமாய் வாழ்வதற்கென்றேன்.......
படிக்காதவர்கள்  சந்தோசமாய்.....
வாழ்வில்லையா.......

ஆலயத்துக்கு ஏன் போகிறாய்......
என்று கேட்டார் தாத்தா........
இறைவனிடம்
கல்வியை கேட்கப்போகிறேன்
அப்போ பாடசாலை  கல்வியைத்....
தரவில்லையா ...............

துன்பத்தால் துவண்டு விழுந்தேன்.....
இன்பத்துக்காய் இறைவனை.......
மன்றாடினேன்.........
தோளில் தாட்டிக்கேட்டார் தாத்தா...
துன்பத்தை இறைவன் தருவதில்லையா....
கேள்விக்குறியில்லாத வினாத்தாள் ......
முற்றுப்புள்ளியில்லாத விடைகள்...........!

^^^
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பாணம்
கவி அகரம்இலக்கியவட்டம்

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி