காதல் அணுக்கவிதைகள்..!!!

கே இனியவன்
அணுக்கவிதை
*************

நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!

<3

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!!
 

<3
இதயம்
துடிக்க‌ காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!

<3

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!

<3
நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!

<3
ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?

<3
அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?

<3
உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!

<3
நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை

<3
நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!


கவிப்புயல் இனியவன்
உன்னை அணு அணுவாக காதலிக்கிறேன் -உனக்கு அணுக்கவிதை எழுதுகிறேன் * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னை யாரும் கடத்த துன்புறுத்த முடியாது -என் இதயத்துக்குள் இருப்பதால் ...!!! * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
இழக்க கூடாத ஒன்றையே இழந்து விட்டேன் உன்னிடம் என் இதயத்தை ...!!! * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
நானும் சாரை பாம்புதான் உன்னை தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டேன்....!!! * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
உன் கண்ணீர் மழையில் நனையாமல் இருக்க - என் நினைவு குடையை விரிக்கிறேன் * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
எனக்கு தெரியும் என் நினைவெல்லாம் என்னிடத்தில் வெறும் உடலோடு அங்கு நடமாடுகிறாய் * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை விரும்பு என்று கெஞ்ச மாட்டேன் என்னை விரும்பாத வரை விட மாட்டேன் * * கே இனியவன் அணுக்கவிதை

கவிப்புயல் இனியவன்
உலகில் பெரிய சித்திர வதை பேசிய ஒரு உள்ளம் பேசாமல் இருப்பது தான் ...... உலகில் பெரிய குற்றம் காதல் செய்யாமல் காதலிப்பது போல் நடிப்பது தான் ....!!! * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
எத்தனை உள்ளங்கள் கெஞ்சி கேட்டாலும் தனிப்பட்ட கவிதை யாருக்கும் இல்லை உயிரே எத்தனை கவிதை எழுதினாலும் உனக்கு தவிர யாருக்கும் இல்லை * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
என்னை காதலால் சித்திர வதை செய்கிறாள் கண்களால் கைது செய்தவள் நினைவு என்னும் சிறைச்சாலையில் தினம் வாடி துடிக்கிறேன் * * கே இனியவன் அணுக்கவிதை
கவிப்புயல் இனியவன்
உனக்காக எதையும் இழப்பேன் என்னவள் என்னை இழந்து நிற்கிறாள் எனக்காக எதையும் வைத்திருக்காத நான் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் * * கே இனியவன் அணுக்கவிதை

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி