யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )


pandima
pandima 

நானும் வணங்குகிறேன்.பெருமைப் படுகிறேன் வணங்குவதில் 
வினோத் கன்னியாகுமரி
வினோத் கன்னியாகுமரி 
அடுத்தவன் விளைபொருட்களை விற்பனை செய்து அதில் கமிஷன் வாங்கி சமபாதிக்கும் வணிகனை விட, அடுத்தவர் உழைப்பை வைத்து நிறுவனம் நடத்தும் நிறுவனர்களை விட, கலை என்ற பெயரில் ஜாலியாக இருக்கவிரும்பும் கலைஞர்களை விட, அடுத்தவனை ஆட்சி செய்யவிரும்பும் அதிகாரிகளை விட
விவசாயியும், ஆசிரியரும், நாட்டை காவல் காக்கும் ராணுவ காவலர்களும் எப்போதும் போற்றப்படவேண்டியவர்கள். 

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நன்றி ...நானும் விவசாய‌ குடும்பத்தை சேர்ந்தவன் நான் ஒரு பட்டதாரி ஆசியர் (பொருளாதாரம் ) என் அப்பப்பா ஒரு காவல் துறை அதிகாரியாக‌ இருந்தவர் உங்கள் பாராட்டுக்கு மிக்க‌ நன்றி ....!!! உணர்வுகள் வரும் போது சிறப்பு கவிதையும் வருகிறது மிக்க‌ நன்றி நன்றி நன்றி
காளீஸ்
காளீஸ் 
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......


நானும் கூட விவசாய குடுமும்பத்தைச் சேர்ந்தவள் தான் ஆனால்ல்ல்ல்ல்ல்
விளை நிலத்தை பார்த்ததில்லை,
அடுத்தவனிடம் கை கட்டி மண்டியிட்டு கிடக்க வேண்டாம்
விவசாயம் கை கொடுத்தால்

வரிகள் அருமை

ஜோஸ்
ஜோஸ் 
"இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!"  உண்மையான‌, உணர்வுமிக்க வரிகள்...... :clap:  :clap:  
R.S.ALLWIN
R.S.ALLWIN 
திரு.ஆ .குமாரசாமி /  திரு.குமாரசாமி
இரண்டு பேரும் பெற்ற பிள்ளைகள் சாதித்த பிள்ளைகளே!
1) கு.காமராஜர் முன்னாள் தமிழ் நாட்டின் முதலமைச்சர்.
2) கு.உதயகுமாரன் ( நிறைய துறைகளில் சாதனை  கொண்டுஇருப்பவர் ) நீங்கள்.
இரண்டு தந்தை- ம்   அடியானுடைய  இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
எங்கள் தாத்தா திரு.இலச்சுமனபாண்டி அவர்கள் 1935 வரை யாழ்ப்பாணம் என்னும்  உங்கள் ஊரிலேயே விவசாயம் செய்து வந்தார்கள். அதே வருடம் அங்கு வந்த இஈழ தமிழர் & இந்திய தமிழர் பிரச்சினை காரணமாக திருநெல்வேலி வந்து விட்டார்கள்.
தற்போதும் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் தங்கள் கவிதை 90% எங்களுக்காகவே வரைந்த கவிதை போல இருக்கிறது.
விவசாய்களின் பிரச்சினைகளை உண்மை நிலைமையை கவிதைகளாய் வடிவமைத்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!
உலகின் தலை சிறந்த தொழில் விவசாயம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்திய அரசு எதையும் கண்டுகொள்வது கிடையாது. இனி உணவு தட்டுப்பாடு வந்தால்தான் கண் விளிப்பார்கள் போல!

 இப்படிக்கு
என்றும் அன்புடன்
திராவிட தமிழ் சகோதரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
இப்படிக்கு என்றும் அன்புடன் திராவிட தமிழ் சகோதரன் மிக்க‌ நன்றி திராவிட‌ தமிழா உணர்வால் இணைகிறோம் இணைவோம்

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி