உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உலக போதையிலேயே கொடூரம் உன் போதை கண் தான் -இன்னும் போதையில் இருந்து மீளவில்லை ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார் நீ கண் திறந்த போது நான் எரிந்தேன் முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...? ------------------------------ உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நீ வேறு நான் வேறு இல்லை வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை ------------------------------------------------ உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால் வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன் இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன் ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உன்னை மறக்கும் இதயம் வேண்டும் என்னை மறக்கும் இதயம் வேண்டும் மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும் ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம் புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம் காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம் ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும் பயிற்ற பட்டிருப்பேன் வழியில் இருந்து தப்ப ,,,!!! ------------------------------ உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய் அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய் பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!!! ------------------------------ உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன் நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய் நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!! ------------------------------ உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
சுந்தரேசன் புருஷோத்தமன்
சுந்தரேசன் புருஷோத்தமன் 
கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!  

--> இதயம் மட்டும்தானே அடிவாங்குகிறது...ம்ம்ம்?!  :)

நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?

--> பிடித்தது :)

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!!!

--> பின்னே? காதலியைக் கழுகாய் வர்ணித்ததற்கே கொத்த வேண்டும் :)


உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை 

--> ம்ம்ம்... போதை வேண்டும்! அதனால் தானே கவிதை இங்கே பிறந்தது :)

இனிய உவமையுடன் அருமை கவிதைத் துளிகள் இனியவரே :)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
வெறும் மூச்சை விட்டே இறப்பதை நான் விரும்பவில்லை உன் பேச்சோடு இறக்கவே ஆசைப்படுகிறேன் ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
நீ....என்ன சித்திர குப்தனில் மகளா ..? ஏன் என்னை சித்திர வதை செய்கிறாய் ..? ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உலகில் எல்லோருமே பைத்திய காரர் தான் காதலில் விழுந்து விடுவதால் ..! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உயிரே... எனக்கு மரணமே இல்லை.... எனக்காக நீ தானே சுவாசிக்கியாய்... ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
எனது கவிதைகள்... அடுத்த சில நொடியில்..... பிறர் கவிதையாக வருகிறது.... பிரபல தளங்கள் கூட..... போட்டோ வடிவில் தயாரித்து.... வெளியிடுகிறார்கள் - ஆனால்.... காலபோக்கில் இனியவன் தங்கள்.... கவிதையை திருடினார் .... என்று சொல்லாமல் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
முகம் பார்த்து வருவது இல்லை காதல் அகம் பார்த்து தான் காதல் வரும் அக காதல் முககாதலுக்கு நிகரில்லை ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உன்னோடு பேசிய இரவு மண்ணோடு மறையும் வரை இதயத்தில் புண்ணோடு இருக்கும் ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
கவிதை எழுதி உன்னை வசப்படுத்தவில்லை என் உயிரை எழுதி உயிர் வாழ்கிறேன் என் கவிதை என்றால் உன் உயிர் ஆகும் ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உயிரே நீ என்னில் காட்டும் அன்பு உயிரின் வலியை உணரப்பண்ணுகிறது உயிர் பிரியும் போது ஏற்படும் வரியை போல் ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
உனக்கு காதல் ஒரு தூசு போல் கண்ணில் இருந்து கலங்க வைகிறாய் இதயத்தில் வை அன்பே என்னை ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார் நீயும் எனக்கு பலவடிவில் காட்சி தருகிறாய் ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
காதல் வரும்போது கண்ணால் வருகிறது போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய் கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய் இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
இதயத்தில் இருந்து என்னை வெளியேற்றி விட்டு .. என் இதயத்தை ஏனடி பூட்டி விட்டு என் இதய சாவியையும் ஏனடி கொண்டு திரிகிறாய் ..? ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
காதல் தோல்வியில் இருந்து கற்றேன் உயிராய் இருக்கும் எதுவும் என்னுடையது இல்லை பிறருக்கு உரியதை உயிராய் நினைத்தோம் ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
அருகில் நீ உள்ள போது இருந்த காதலை விட தொலைவில் -நீ இருக்கும் காதல் சுகமாய் உள்ளது ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
கை கோர்த்து திரிந்தபோது கால் வலித்தது ..!!! உன்னை காத்து காத்து நின்றபோது கண் வலித்தது..!!! நீ இதய கதவை மூடியதால் என் இதயம் வலிக்கிறது .! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன் 
இமைகளின் ஒவ்வொரு முடியும் உன் நினைவுகள் .!! சிமிட்டினால் உன் நினைவுகள் பறந்து விடும் ..!!! விழித்திருகிறேன் நினைவுகள் கலையாமல் ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
இதயசோலையில் இருப்பவளே நீ சிரிக்கும் போது நானும் சிரிக்கிறேன் உன் அழகை அககண்ணால் ரசிக்கிறேன் ------------------------------ உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
ஒருமுறை என்னை திட்டு ஒருமுறை என்னை திரும்பி பார் நானும் காதல் பருவத்தில் இருக்கிறேன் ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
உன்னை நினைத்தேன் வருகிறாய் என்னில் உன்னை சுமக்கிறேன் நான் நினைப்பதை நீ செய்கிறாய் ....!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
நீ சுட்ட வடையாக இருந்தாய் நான் காக்கையாக மாறினேன் வாழ்க்கை நரிபோல் மாறிவிட்டது ....!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
உடல் அழகில் நீயே மிக அழகு ...!!! முக அழகில் நீயே எப்பவும் அழகு ...!!! காதலில் நான் தான் காதலுக்கு அழகு ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
கவிப்புயல் இனியவன்
காதலுக்கு கண் தான் இன்பம் அதே கண் தான் துன்பமும் ...!!! அனுபவித்து சொல்கிறது கண்ணீர் ...!!! ------------------------------- உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி

கருத்துகள்

பிரபலம் பெற்ற கவிதை

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

தேர் திருவிழா

கவிதை மற்றும் கட்டுரைகள்