இடுகைகள்

உங்கள் இரத்த வகை

உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா? February 23, 2016 டைம் பாஸ்   Leave a comment இரத்த வகைகளைக் கொண்டே உங்களின் குணாதிசயம், சுபாவம், ஆரோக்கியம், நீங்கள் எதில் வலிமையானவர் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா? சமீபத்தில் ஜப்பானில் இரத்த வகை மற்றும் ஒருவரின் குணாதிசயம் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் இவை இரண்டிற்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதுவும் ஒருவரின் குணத்தை அவரது இரத்த வகையைக் கொண்டே கூற முடியுமாம். அதனால் தான் ஜப்பானில் உள்ள ஜோதிடர்கள் ராசியைக் கேட்பதற்கு பதிலாக, அவர்களது இரத்த வகையை கேட்கிறார்களாம். மேலும் கொரியா மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளிலும், இரத்த வகையைக் கொண்டே ஒருவரைப் பற்றி கூறுவதாக கருதப்படுகிறது. இரத்த வகைகளில் ஏ, பி, ஏபி மற்றும் ஓ உள்ளன. இங்கு நாம் பார்க்கப் போவது ஒவ்வொரு இரத்த வகையினரின் காதல் வாழ்க்கை, பணி வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றைத் தான். சரி, இப்போது அவற்றைக் காண்போமா! இரத்த வகை A+, A- இந்த வகையினர் மிகுந்த சகிப்புத்தன்மை மற்றும் தங்களது உணர்வுகளை மறைப்பவர்கள். இவர்கள...

சமூக அவல சென்ரியூ கள்

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை

தமிழ் இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. சமூகப் பொருளாதார அரசியல் சூழல்களே இம்மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் எனலாம். அறிவியலின் நவீன வளர்ச்சி உலகின் பரப்பை சுருக்கிவிட்டது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மொழிபெயர்புக் கலையின் வளர்ச்சியினாலும் பிற நாட்டு இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், வடிவங்கள் போல் வன தமிழில் தலை எடுக்கத் தொடங்கின. இவ்வகையில் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவம் தான் "சென்ரியூ" கவிதை வடிவம். "சென்ரியூ" - தோற்றம் சென்ரியூ கவிதைகளின் தோற்றம் குறித்துப் பொதுவாகச் சொல்வதெனில் இஃது ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியது என்று கூறிவிடலாம் என்றாலும் ஹைகூவிலிருந்து சென்ரியு தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டதற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. 1980 ஆம் ஆண்டு "அன்றாடமை" என்னும் தலைப்பில் சென்ரியூ அங்கதக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. இதன் தொகுப்பாசிரியர் மேரி கேசல் என்பவர் இந்நூலின் முன்னுரையில் "ஹைகூவின் அங்கத வடிவம் சென்ரியூ. ஹைகூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில்,...

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ , சென்ரியு ,  லிமரைக்கூ வடிவம் ஹைக்கூ ‘ஹை’  என்பதற்கு  ஜப்பானிய  அடிச்  சொல்லுக்கு  அணுத்தூசி,  கரு,  முழுமையான  கரு  என்ற  பொருள்  உண்டு.  ‘கூ’  என்பது  சொற்றொடர்,  வெளிப்பாடு,  வாக்கியம்,  பகுதி,  ஒரு  வரி,  ஓர்  அடி,  ஒரு  செய்யுள்,  ஒரு  கவிதை  என்றும்  பொருள்  தருகிறது.  இவற்றை  இணைத்துப்  பார்க்கையில்  ஹைக்கூ  என்பது  கரு  போன்றும்,  உயிரணு  போன்றும்  உருவானதொரு  கவிதை  என்னும்  முழுப்பொருளைத்  தரும்.  மேலும்  வளர்ச்சிக்கும்  விரிவுக்கும்,  ஒரு  கருவுக்கு  உள்ளிருக்கும்  இன்னொரு  கவிதைக்  கருவைக்  காண்பதற்கும்  ஹைக்கூ  என்ற  சொல்  சிறப்பாக  அமைந்திருப்பதைக்  காணலாம்.  ‘ஹைக்கூ’  ஜப்பானிய  மொழிக் கவிதை.  3  அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள் ...

அஃகம் சுருக்கேல்

இந்த 45 சொற்களில் மிக குறைவான சந்தர்பங்களில் ஏழு அல்லது எட்டு சொற்களையே செந்தமிழில் பயன்படுத்துகிறோம். நாற்பத்தைந்தே சொற்கள் என்பதால், பட்டியல் இடுவது எளிது என்பதனால், ஒரு பதிவு கருதி அவற்றைக் கீழே தருகிறேன். 1. அஃகடி – அக்கடி, துன்பம் 2. அஃகம் – தானியம், நீரூற்று, முறைமை 3. அஃகு – தகுதி, ஊறு நீர் 4. அஃகரம் – வெள்ளெருக்கு 5. அஃகான் – The letter of அ. அகரம் 6. அஃகுதல் – அளவில் குறுகுதல், சுருங்குதல், மனம் குன்றுதல், நுண்ணிதாதல், கழிந்து போதல், குவிதல் – ‘ஆம்பல் அஃகுதலும்’ 7. அஃகுவஃகெனல் – Expression of restless wanderings. அஃகு அஃகு எனல். 8. அஃகுல்லி – உக்காரி எனும் சிற்றுண்டி (பிங்கல நிகண்டு) 9. அஃகேனம் – The letter ஃ. ஆய்த எழுத்து 10. அஃதான்று – Besides 11. அஃது – அது 12. அஃதே – Indeed, Alright. அப்படியே. 13. அஃதை – சோழன் ஒருவனின் மகள் 14. அஃபோதம் -சகோலப் பறவை (பிங்கல நிகண்டு) 15. அஃறிணை – அல் திணை 16. இஃது – இது 17. எஃகம் – எஃகு, எஃகாயுதம், வாள், வேல், சக்கரம், பிண்டி பாலம் (Javelin) , சூலம் (Trident) 18. எஃகுதல் - To pull with fingers, as cott...