அஃகம் சுருக்கேல்
இந்த 45 சொற்களில் மிக குறைவான சந்தர்பங்களில் ஏழு அல்லது எட்டு சொற்களையே செந்தமிழில் பயன்படுத்துகிறோம். நாற்பத்தைந்தே சொற்கள் என்பதால், பட்டியல் இடுவது எளிது என்பதனால், ஒரு பதிவு கருதி அவற்றைக் கீழே தருகிறேன். 1. அஃகடி – அக்கடி, துன்பம் 2. அஃகம் – தானியம், நீரூற்று, முறைமை 3. அஃகு – தகுதி, ஊறு நீர் 4. அஃகரம் – வெள்ளெருக்கு 5. அஃகான் – The letter of அ. அகரம் 6. அஃகுதல் – அளவில் குறுகுதல், சுருங்குதல், மனம் குன்றுதல், நுண்ணிதாதல், கழிந்து போதல், குவிதல் – ‘ஆம்பல் அஃகுதலும்’ 7. அஃகுவஃகெனல் – Expression of restless wanderings. அஃகு அஃகு எனல். 8. அஃகுல்லி – உக்காரி எனும் சிற்றுண்டி (பிங்கல நிகண்டு) 9. அஃகேனம் – The letter ஃ. ஆய்த எழுத்து 10. அஃதான்று – Besides 11. அஃது – அது 12. அஃதே – Indeed, Alright. அப்படியே. 13. அஃதை – சோழன் ஒருவனின் மகள் 14. அஃபோதம் -சகோலப் பறவை (பிங்கல நிகண்டு) 15. அஃறிணை – அல் திணை 16. இஃது – இது 17. எஃகம் – எஃகு, எஃகாயுதம், வாள், வேல், சக்கரம், பிண்டி பாலம் (Javelin) , சூலம் (Trident) 18. எஃகுதல் - To pull with fingers, as cott...